BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஹோமியோபதி சிகிச்சை நிலையம் என்ற பெயரில் பாலியல் விடுதி: முல்லேரியாவில் மருத்துவர் உட்பட நால்வர் கைது

ஹோமியோபதி சிகிச்சை நிலையம் என்ற பெயரில் பாலியல் விடுதி: முல்லேரியாவில் மருத்துவர் உட்பட நால்வர் கைது

முல்லேரியா காவல் பிரிவிற்குட்பட்ட அம்பத்தல பகுதியில், ஹோமியோபதி சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் பாலியல் விடுதி ஒன்றை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது, மூன்று சந்தேகநபர்களும் விடுதி நிலையத்தின் உரிமையாளராகக் கூறப்படும் ஹோமியோபதி மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, மருத்துவ சிகிச்சை வழங்குவதாகக் கூறி அதன் மறைவில் பாலியல் சேவைகள் வழங்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கு ஒரு மணிநேர சேவைக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.7,000 வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் வெளிச்சத்துக்குவந்துள்ளது.

இந்த முற்றுகை நடவடிக்கை, மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகர மற்றும் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் ஜனக குமார ஆகியோரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை பரிசோதகர் சுமித் ஜயசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில், உப காவல்துறை பரிசோதகர் பாஸ்நாயக்க தலைமையிலான குழுவில் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட பல அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"