BREAKING
தமிழர் பகுதியில் பெண்கள் பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் தகாத செயற்பாடுகளால் அச்சம் போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது தமிழர் பகுதியில் பெண்கள் பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் தகாத செயற்பாடுகளால் அச்சம் போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது

இலங்கை வந்த இளம் வர்த்தகர்கள் அதிரடி கைது

இலங்கை வந்த இளம் வர்த்தகர்கள் அதிரடி கைது

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளின் தொகுதியொன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த மூன்று இலங்கை விமானப் பயணிகள் இன்று (27) நண்பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறித்த சிகரெட் தொகுதியைச் சீனாவிலிருந்து கொள்வனவு செய்து மலேசியாவிற்குச் சென்று, அங்கிருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 32 வயதுக்கு இடைப்பட்ட வர்த்தகர்கள் மூவராவர்.

அவர்களால் கொண்டுவரப்பட்ட பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 47,000 சிகரெட்டுகள் அடங்கிய 235 சிகரெட் காட்டூன்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முறையான சுங்க விசாரணையை முன்னெடுத்ததன் பின்னர், குறித்த சிகரெட்டுகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் மூவருக்கும் 175,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"