BREAKING
மாவீரர் துயிலுமில்லங்களில் கண்ணீருடன் குவிந்த உறவுகள்; தாயகம் எங்கும் சோகம் இலங்கையின் கடன் தரப்படுத்தல் 'CCC+/C' இலிருந்து 'B-/B' ஆக உயர்த்தப்பட்டது இலங்கை வந்த 03 இளம் வர்த்தகர்கள் அதிரடி கைது லலித் – குகன் வழக்கு ; காணோளி மூலம் கோட்டபாய சாட்சியம் ; யாழ் டனீதிம்ன்றின் உத்தரவு செம்மணி புதைகுழி அறிக்கையில் உண்மைகள் மறைப்பு! மாவீரர் துயிலுமில்லங்களில் கண்ணீருடன் குவிந்த உறவுகள்; தாயகம் எங்கும் சோகம் இலங்கையின் கடன் தரப்படுத்தல் 'CCC+/C' இலிருந்து 'B-/B' ஆக உயர்த்தப்பட்டது இலங்கை வந்த 03 இளம் வர்த்தகர்கள் அதிரடி கைது லலித் – குகன் வழக்கு ; காணோளி மூலம் கோட்டபாய சாட்சியம் ; யாழ் டனீதிம்ன்றின் உத்தரவு செம்மணி புதைகுழி அறிக்கையில் உண்மைகள் மறைப்பு!

இல் புதிய வசதி அறிமுகம்

இல் புதிய வசதி அறிமுகம்

WhatsApp செயலியில் பயனர்கள் குறுஞ்செய்திகள், ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே அனுப்புவதற்கான ‘Scheduled Messages’ எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், 10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரையான காலப்பகுதிக்கு முன்கூட்டியே செய்திகளைத் திட்டமிட முடியும்.

தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் குழு உரையாடல்கள் என இரண்டிலும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். செய்தியைத் தட்டச்சு செய்த பின்னர், அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடித்து, விரும்பிய திகதி மற்றும் நேரத்தைத் தெரிவுசெய்து அனுப்புவதற்குத் திட்டமிடலாம்.

மேலும், திட்டமிடப்பட்ட செய்திகளை அனுப்புவதற்கு முன்னர் பார்வையிடவும், தேவையெனில் நீக்கவும் முடியும்.

குறிப்பிடத்தக்க வகையில், தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது மின்கலச் சக்தி இல்லாத நிலையிலும் திட்டமிடப்பட்ட நேரத்தில் செய்திகள் தானாகவே அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்திசெயலி இந்தப் புதிய வசதி உலகளாவிய ரீதியில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"