சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்தினாயக்க இன்று (27) வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இதன்போது, அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், எந்த விடயம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது என்பது குறித்தோ, விசாரணையின் பின்னணி தொடர்பிலோ இதுவரை மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக