BREAKING
18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்! இலங்கைக்கு நீண்டகால ரூபாய் நிதியுதவி ; உலக வங்கிக் குழுமம் புதிய திட்டம்! ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்! 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்! இலங்கைக்கு நீண்டகால ரூபாய் நிதியுதவி ; உலக வங்கிக் குழுமம் புதிய திட்டம்! ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்!

ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்

ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்

பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (20) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தின்போதே இந்த விடயங்கள் ஆராயப்பட்டன.

ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களின்போது எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, ஆசிரியர் இடமாற்றச் சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் தூர வரையறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துவதால், அதனை மீளாய்வு செய்யுமாறு இடமாற்றச் சபைக்கு அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசியப் பாடசாலைகளில் நீண்டகாலமாகப் பணியாற்றும் ஆசிரியர்களின் இடமாற்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, தேசியப் பாடசாலைகளுக்கும் மாகாணப் பாடசாலைகளுக்கும் இடையில் ஆசிரியர்களை இடமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வட மாகாணத்திற்கான புதிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் அரைகுறையாகக் கைவிடப்பட்ட கட்டடங்கள் மற்றும் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் கையளிக்கப்படாத கட்டடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், குளியாபிட்டிய மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடம் தொடர்பில் தனியான விசாரணையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், வவுனியா மாவட்டத்தின் செம்பலங்குளம் மற்றும் தாஜனிக்குளம் பாடசாலைகளின் விசேட கல்விப் பிரிவுகளுக்கான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடுகளை வழங்கவும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களில் 12 திட்டங்களுக்கான மதிப்பீடுகளை அங்கீகரித்து நிதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டத்தை முறையாகக் கண்காணிப்பதற்கான பொறிமுறை, பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் உணவுத் தரம் மற்றும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.

மேலும், பாடசாலைகளில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் அவற்றை முறையாகப் பயன்படுத்துவது தொடர்பான நிபுணர் குழு அறிக்கையும் கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்னவினால் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"