இந்தியாவில் திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமகள் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் மணமகன் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவிக்கையில், நெல்லை மாவட்டம் தாழையூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும், அரியகுளம் பகுதியை சேர்ந்த 27 வயது வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் பெரியோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
வீட்டுக்கு சென்றபோது மணமகளின் வயிறு சற்று பெரிதாக இருப்பதை கவனித்த மணமகன் விட்டார். இதுபற்றி அந்த பெண்ணிடம் விசாரித்த போது தனது வயிற்றில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் அதற்காக மருந்துகளை சாப்பிடுவதால் வயிறு வீங்கியிருக்கிறது எனவும் அந்த பெண் கூறியிருக்கிறார்.
அடுத்த நாள் காலை அந்த பெண் கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் கழித்து வெளியே வந்திருக்கிறார் மணமகனும் அவரின் குடும்பத்தினரும் கழிப்பறைக்கு சென்று பார்த்த போது அங்கு ஒரு குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியான அவர்கள் முதலில் மணப்பெண்ணை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, மணப்பெண் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்..
அப்போது திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணுக்கு வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமடைந்தும், மணப்பெண் வீட்டார் அதை மறைத்து வெங்கடேசுக்கு திருமணம் செய்து வைத்ததும் தெரிய வந்ததுள்ளது.
இதையடுத்து உண்மையை மறைத்து திருமணம் செய்த குற்றம், மோசடி உள்ளிட்ட சில பிரிவுகளின் பின் மணப்பெண்ணின் குடும்பத்தார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக