மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், 23 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றைய 21 வயதுடைய இளைஞர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமான மற்றும் தவறான சாரத்தியமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக