BREAKING
ஒரு லட்சத்துக்கும் கீழே இறங்கிய தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி! Big boss முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண் இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு! ஒரு லட்சத்துக்கும் கீழே இறங்கிய தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி! Big boss முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண் இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் பல பகுதிகளில் வளி மாசுபாட்டுச் சுட்டெண் சுவாசிப்பதற்கு ஆரோக்கியமற்ற மட்டங்களுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு, வடமத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் வளி மாசுபாட்டுச் சுட்டெண் 200 இற்கும் அதிகமான மதிப்பைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்குக் பிரதான காரணமாக, வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவிய கொந்தளிப்பான காலநிலை காரணமாக எல்லைகளைத் தாண்டி நடக்கும் வளி சுழற்சி ஊடாக இந்நாட்டுக்குள் வளி மாசுபடுத்தும் துகள்கள் நுழைவது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் காரணமாக திறந்தவெளியில் பனிமூட்டத்தைப் போன்றதொரு தன்மையைச் சில பிரதேசங்களில் அவதானிக்க முடியும் எனவும், அவ்வாறு தெரிவது வளிமண்டலத்தில் காணப்படும் தூசு மற்றும் துகள்களே எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போதுள்ள தரவுகளின்படி இந்த நிலைமை மேலும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நீடிக்கலாம் எனினும், நிலவும் காலநிலை கொந்தளிப்புகள் மற்றும் வளி சுழற்சி முறைகள் காரணமாக இதனைத் துல்லியமாக எதிர்வு கூறுவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக வயதானவர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் வளிமண்டலத்தில் காணப்படும் தூசுத் துகள்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தகைய நபர்களுக்கு ஒவ்வாமைகள் அல்லது சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சைகளைப் பெறுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

மேலும், காலை வேளையில் இந்த நிலைமையை மிகவும் தெளிவாக அவதானிக்க முடியும் என்பதுடன், எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை தணிந்துவிடும் என எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி அஜித் குணவர்தன மேலும் தெரிவித்தார்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"