BREAKING
அநுராதபுர மோதல் ; வாக்குமூலம் வழங்க மறுத்த கஸ்ஸப தேரர் தரப்பு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை கஸ்ஸப தேரரின் கம்பு சுழற்றல் நாட்டிற்கு தீங்கு ; ஜனாதிபதி அனுர கடும் சினம் நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள் ; 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை பலியெடுத்த சம்பவம் ; மேலதிக தகவல் வெளியானது அநுராதபுர மோதல் ; வாக்குமூலம் வழங்க மறுத்த கஸ்ஸப தேரர் தரப்பு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை கஸ்ஸப தேரரின் கம்பு சுழற்றல் நாட்டிற்கு தீங்கு ; ஜனாதிபதி அனுர கடும் சினம் நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள் ; 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை பலியெடுத்த சம்பவம் ; மேலதிக தகவல் வெளியானது

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி எதிர்வரும் நாட்களில் புயலாக வலுப்பெறக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்நிலையில், ஆழ்கடல் மற்றும் குறிப்பிட்ட கடற்கரைப் பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினருக்கும் மீனவ சமூகத்தினருக்கும் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை 5.30 மணி முதல் மறுஅறிவித்தல் வரை இந்தத் தடை அமுலில் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட ஆலோசனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் தற்போது உருவாகியுள்ள இக்காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடமேற்கு திசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதே பிராந்தியத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.

அதனைத் தொடர்ந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை திங்கட்கிழமை மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் புயலாக மேலும் வலுவடையக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஆழ்கடல் பகுதிகளுக்கும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்கரைப் பிரதேசங்களுக்கும் கடற்படை மற்றும் மீன்பிடிப் படகுகள் செல்ல வேண்டாம் எனக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தற்போது குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படகுகள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"