களுத்துறை, நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவர் களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 9 ஆம் திகதி களுத்துறை தெற்கு, கல்லஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள உணவகத்திற்குள் குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதுடன், இத்தாக்குதலில் உணவகத்தின் உரிமையாளரும் அவரது மனைவியும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், நேற்று மாலை களுத்துறையில் வைத்து குறித்த சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் களுத்துறை தெற்குப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.
மேலும், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்குப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக