BREAKING
பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கும் கஸ்ஸப தேரர் அனுராதபுரத்தில் இராமர் கோயில் ; புதிய வர்த்தமானி.... விமல் வீரவன்ச ஆவேசம்! வங்காள விரிகுடாவில் சூறாவளி; விடுக்கப்பட்ட எச்சரிக்கை உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்திய ஆசிரியை; விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி! 'யசிரு புதா' படகில் ரூ. 1.5 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்; s பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கும் கஸ்ஸப தேரர் அனுராதபுரத்தில் இராமர் கோயில் ; புதிய வர்த்தமானி.... விமல் வீரவன்ச ஆவேசம்! வங்காள விரிகுடாவில் சூறாவளி; விடுக்கப்பட்ட எச்சரிக்கை உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்திய ஆசிரியை; விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி! 'யசிரு புதா' படகில் ரூ. 1.5 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்; s

'யசிரு புதா' படகில் ரூ. . பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்;

'யசிரு புதா' படகில் ரூ. . பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்;

கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் மீன்பிடிப் படகில், ஒன்றரை பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (13) குறித்த படகு காலி மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், அதனை நேரில் பார்வையிட்ட போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள ஆழ்கடலில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளைக் கடத்திச் சென்ற 'யசிரு புதா' என்ற மீன்பிடிப் படகு கடந்த 11 ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட்டது.

குறித்த படகிலிருந்த 5 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அப்படகும் மீனவர்களும் இன்று காலை காலி மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.

சோதனையின் போது, அதனுள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் இருந்தமை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.

படகினுள் சுமார் 60 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 50 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் இருந்தமை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் தொகை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், போதைப்பொருட்களின் மொத்த எடை 110 கிலோகிராமுக்கும் அதிகம் எனத் தெரிவித்தார்.   

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"