BREAKING
இலங்கைக்கு வந்த 3,000 மெற்றிக் தொன் எரிவாயு; லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு ருவன்வெலிசாய போராட்ட இடத்திற்கு செல்ல தடை வெள்ளம் என போலி காணொளி வெளியிட்டால் சட்ட நவடிக்கை; கடும் எச்சரிக்கை! இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் இலங்கைக்கு வந்த 3,000 மெற்றிக் தொன் எரிவாயு; லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு ருவன்வெலிசாய போராட்ட இடத்திற்கு செல்ல தடை வெள்ளம் என போலி காணொளி வெளியிட்டால் சட்ட நவடிக்கை; கடும் எச்சரிக்கை! இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம்

இலங்கைக்கு வந்த , மெற்றிக் தொன் எரிவாயு; லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

இலங்கைக்கு வந்த , மெற்றிக் தொன் எரிவாயு; லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

  3,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் படிப்படியாக மீள ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

‘கேஸ் குட்வில்’ எனும் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், அதிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் நிறைவடைந்ததும் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளது.

விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட வீட்டு மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், பல கட்டங்களாக விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்னர் தமது பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் லாப்ஸ் நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"