BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விஜய் ஒன்றும் சூர்யா அளவுக்கு சாதனை செய்யவில்லை இயக்குநர் ராஜகுமாரன் கடும் விமர்சனம்

விஜய் ஒன்றும் சூர்யா அளவுக்கு சாதனை செய்யவில்லை இயக்குநர் ராஜகுமாரன் கடும் விமர்சனம்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர் ராஜகுமாரனின் கருத்துகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பிரபல நடிகை தேவையானியின் கணவரும் இயக்குநருமான ராஜகுமாரன், எந்த பேட்டியில் கலந்து கொண்டாலும் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான இயக்குநர்களை விமர்சித்து, யாருக்கும் முறையாக படம் எடுக்கத் தெரியவில்லை என்ற கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் பல தரப்பினரின் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறார்.

இதனுடன் பல முன்னணி நடிகர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் ராஜகுமாரன், நடிகர் விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது என கூறிய கருத்து ரசிகர்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கியது. அவரது பேச்சுகள் தொடர்ந்து சர்ச்சையாகி வரும் நிலையில், தற்போது நடிகர் விஜயை குறிவைத்து அவர் பேசிய கருத்துகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியிட்ட கருத்தில், விஜய் தற்போது எல்லோருக்கும் வீடு கட்டிக் கொடுப்பேன் என்று பேசிவருவதாக குறிப்பிட்ட ராஜகுமாரன், பெப்சி அமைப்பைச் சேர்ந்த பலர் இன்னும் வீடு இல்லாமல் இருப்பதாகவும், முதலில் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சுனாமி ஏற்பட்ட போது வெளிநாட்டில் இருந்த விவேக் ஓப்ராய் உடனடியாக தமிழ்நாட்டுக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததாக சுட்டிக்காட்டிய அவர், அந்த நேரத்தில் விஜய் என்ன செய்தார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், நடிகர் சூர்யா தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக கூறிய ராஜகுமாரன், சூர்யா அளவுக்கு விஜய் எதையும் செய்து விடவில்லை என்றும், அவரை விட விஜய் அதிகம் சாதித்துவிட்டதாக கூற முடியாது என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, விஜய் ரசிகர்கள

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"