BREAKING
அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு 2027 பட்ஜட் ; பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சலுகை படிக்க சென்ற இடத்தில் பறிபோன உயிர்; பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம் 14ஆம் திகதி நீர் விநியோகம் தடை இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு 2027 பட்ஜட் ; பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சலுகை படிக்க சென்ற இடத்தில் பறிபோன உயிர்; பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம் 14ஆம் திகதி நீர் விநியோகம் தடை இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் இன்று (11) முடிவடையவிருந்ததாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், பிரதேச செயலகங்கள் ஊடாகப் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் நிலைமையைக் கருத்திற் கொண்டு, அதனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அதேவேளை, நாளைய தினத்திற்கு பிறகு ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகளைக் கோருவது இணையவழி (Online) முறைமை மூலமாக மட்டுமே நடைபெறும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இணையவழி முறைமையின் ஊடாக மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதுவரை அஸ்வெசும நன்மைகளுக்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து 105,233 மேல்முறையீடுகள் பதிவாகியுள்ளதாகவும், ஒரு விண்ணப்பதாரர் மற்றொரு விண்ணப்பதாரருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள ஆட்சேபனைகளின் எண்ணிக்கை 1,220 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"