BREAKING
சிறைத்தண்டனையை எதிர்த்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீடு நீதிமன்ற உத்தரவை மீறி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த பிக்குகள் ! அம்பாறை மருத்துவமனையில் அனாதராகவுள்ள 3 சடலங்கள் ; பொலிஸார் கோரிக்கை ஊழியருடன் தகராறு ; நபர் ஒருவர் அடித்துக் கொலை அநுராதபுர விபத்து; விரிவான விசாரணைக்கு உத்தரவு சிறைத்தண்டனையை எதிர்த்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீடு நீதிமன்ற உத்தரவை மீறி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த பிக்குகள் ! அம்பாறை மருத்துவமனையில் அனாதராகவுள்ள 3 சடலங்கள் ; பொலிஸார் கோரிக்கை ஊழியருடன் தகராறு ; நபர் ஒருவர் அடித்துக் கொலை அநுராதபுர விபத்து; விரிவான விசாரணைக்கு உத்தரவு

அநுராதபுர விபத்து; விரிவான விசாரணைக்கு உத்தரவு

அநுராதபுர விபத்து; விரிவான விசாரணைக்கு உத்தரவு

அநுராதபுரம் யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் ரம்பாவ வெலி ஓயா சந்திக்கு அருகில் நேற்று (10)  இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மிஹிந்தலை பொலிஸாருக்கு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதுடன், 71 பேர் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மிஹிந்தலை பொலிஸாரால் 'B' அறிக்கையினூடாக மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, மேலதிக நீதவான் ரம்பேவ பகுதியிலுள்ள விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டதுடன், விபத்துக்குள்ளான 03 பேருந்துகளையும் ஆய்வு செய்தார்.

விபத்தில் சிக்கிய 03 பேருந்துகள் தொடர்பாகவும் மோட்டார் வாகனப் பரிசோதகரிடம் தனித்தனி அறிக்கைகளைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்வையிட்ட நீதவான், சட்ட மருத்துவ அதிகாரி மூலம் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் பணித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து ரம்பாவ நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, அதே திசையில் சென்ற தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. சாரதியின் அபாயகரமான மற்றும் துரித இயக்கமே இவ்விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"