BREAKING
MP அர்ச்சனாவுக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பேருந்தில் பாடசாலை மாணவியின் மோசமான செயல் ஹட்டனில் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின யாழில் திருட்டு சம்பவத்தில் நால்வர் கைது; 17 இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு சிங்கராஜ வனத்தில் நான்கு சீன பிரஜைகளுடன் சிக்கிய பெண் MP அர்ச்சனாவுக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பேருந்தில் பாடசாலை மாணவியின் மோசமான செயல் ஹட்டனில் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின யாழில் திருட்டு சம்பவத்தில் நால்வர் கைது; 17 இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு சிங்கராஜ வனத்தில் நான்கு சீன பிரஜைகளுடன் சிக்கிய பெண்

சிங்கராஜ வனத்தில் நான்கு சீன பிரஜைகளுடன் சிக்கிய பெண்

சிங்கராஜ வனத்தில் நான்கு சீன பிரஜைகளுடன் சிக்கிய பெண்

  சிங்கராஜ வனத்தில் பூச்சிகள் மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்களை சேகரித்துக் கொண்டிருந்த பெண் உட்பட நான்கு சீன பிரஜைகள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடவளவை தேசிய பூங்காவின் பனஹடுவ வன பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 40 விலங்கு இனங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதான சந்தேகநபர்களும் விலங்கு இனங்களும் கலவாணை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற விலங்குகளை அடையாளம் காண்பதற்காக இன்று (10) தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்து, பின்னர் சூழலில் விடுவிக்குமாறும் மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"