இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களில் மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார இது குறித்துத் தெரிவிக்கையில்,
தற்போது வரை சுமார் 13 மில்லியன் நபர்கள் TIN இலக்கத்திற்காகப் பதிவாகியுள்ளதாகவும், இதற்கமைய, மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டும் என அடையாள காணப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் சில அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே நாங்கள் TIN இலக்கத்தைக் கட்டாயப்படுத்தினோம். ஆனால் சட்டத்தின்படி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் TIN இலக்கம் ஒன்றைப் பெற வேண்டும்.
இது தொடர்பாக பலரிடையே ஒரு தேவையற்ற பயம் ஏற்பட்டிருந்தது. இப்போதும் அத்தகைய பயம் நிலவுகிறது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவாகும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தகைய தேவை எதுவும் இல்லை. வரி முறையை முறைமைப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டப்பூர்வ தேவை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக