BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வேலைக்கு சென்ற இளைஞன் விபத்தில் உயிரிழப்பு ஹொரண பகுதியில் சோகம்

வேலைக்கு சென்ற இளைஞன் விபத்தில் உயிரிழப்பு ஹொரண பகுதியில் சோகம்

ஹொரண – களுவெல்லாவ ஊடாக புளத்சிங்கள செல்லும் பிரதான வீதியில், திவலகடை சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற கோர விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளத்சிங்கள பகுதியில் இருந்து ஹொரண நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதே திசையில் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளை முந்துவதற்கு முயன்ற வேளையில், எதிர்பாராத விதமாக ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான வேன் ஒன்றில் மோதியதே இந்த விபத்திற்குக் காரணமாகியுள்ளது.

இந்த விபத்தில் புளத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்த கவீஷ் லக்ஷான் ஹேமரத்ன (18) என்ற இளைஞர் கடுமையாக காயமடைந்துள்ளார். அவர் ஹொரண பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பேக்கரி உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும், வேலைக்குச் சென்று கொண்டிருந்த போதே விபத்தில் சிக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

விபத்துக்குப் பின்னர் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"