கொழும்பில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் கொழும்பு தேசிய மருத்துவமனையின் சில செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
மருத்துவமனையின் ஊழியர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று திடீரென பெய்த கன மழையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, கதிரியக்க பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் மற்றும் பல நோயாளர் விடுதிகள் நீரில் மூழ்கின.
வெள்ளப்பெருக்கு காரணமாக விபத்து பிரிவின் பல மின்தூக்கிகளும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக நோயாளிகளை வேறு விடுதிகளுக்கு மாற்றுவதற்கு வைத்தியசாலை ஊழியர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக