BREAKING
எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் பிரான்ஸின் பல இரத்த வங்கிகளை இலக்குவைத்து சைபர் தாக்குதல் சமூக வலைத்தளங்கள் மூலம் பாலியல் தொல்லை; தமிழர் பகுதியொன்றில் உதவி கோரும் பொலிஸார் எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் பிரான்ஸின் பல இரத்த வங்கிகளை இலக்குவைத்து சைபர் தாக்குதல் சமூக வலைத்தளங்கள் மூலம் பாலியல் தொல்லை; தமிழர் பகுதியொன்றில் உதவி கோரும் பொலிஸார்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு ; புகைப்பிடிக்காத பெண்களுக்கும் ஆபத்து

இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு ; புகைப்பிடிக்காத பெண்களுக்கும் ஆபத்து

 இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலாரிடையேயும் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய சுவாச நோயியல் நிறுவனத்தின் மார்புக் குழி தொடர்பான நிபுணத்துவ அறுவை சிகிச்சை வைத்தியர் சமன் இத்தாகொட தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெலிசறை மார்பு வைத்தியசாலையின் தரவுகள் மற்றும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இருபாலாரிடையேயும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, புகைப்பிடிக்காத பெண்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுரையீரல் புற்றுநோய்களில் சுமார் 90 சதவீதமானவை புகைப்பிடித்தலுடன் தொடர்புடையவை எனத் தெரிவித்த அவர், புகைப்பிடிக்காதவர்களுக்கும் இந்நோய் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, பிறர் புகைக்கும் சிகரெட்டிலிருந்து வெளியாகும் புகையை சுவாசித்தல், அதாவது இரண்டாம் நிலை புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு ஆகியவையும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக் காரணிகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை காரணமாக வெளிப்புறக் காற்று மாசடைவதுடன், வீடுகளில் விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது போதிய காற்றோட்டம் இல்லாத நிலையில் உட்புறக் காற்றும் மாசடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நீண்டகால சுவாச நோய்கள், மண் மற்றும் கட்டிடப் பொருட்களில் காணப்படும் 'ரேடான்' (Radon) கதிர்வீச்சு வாயு, அஸ்பெஸ்டாஸ் மற்றும் சிலிக்கா போன்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகளுக்கு நீண்டகாலம் ஆளாகுவதும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"