BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

"மக்கள் உயிருக்கு ஆபத்து!" - யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை கேட்கிறது நீதிமன்றம்!

"மக்கள் உயிருக்கு ஆபத்து!" - யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை கேட்கிறது நீதிமன்றம்!

யாழ்ப்பாணப் பகுதியில் நிலவும் கடுமையான காற்று மாசடைவு காரணமாக பொதுமக்கள் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வைத்தியர் தொடுத்த வழக்கு:
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் வைத்தியர் ஒருவர், தனது பகுதியில் நிலவும் காற்று மாசடைவைக் கட்டுப்படுத்த உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு (Writ Petition) ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.


மாசடைவுக்கான முக்கிய காரணங்கள்:
மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன:

கழிவு எரிப்பு: யாழ். மாநகர சபை எல்லைக்குள் திறந்தவெளியில் கழிவுகள் எரிக்கப்படுவதால் நச்சுப் புகை காற்றில் கலந்து மாசடைவை ஏற்படுத்துகிறது.

தென்னிந்திய தாக்கம்: புவியியல் ரீதியாகக் காற்று வீசும் திசையினால் தென்னிந்தியாவிலிருந்து வரும் நுண் துகள்களும் யாழ்ப்பாணத்தின் காற்றைத் தரமற்றதாக மாற்றுகின்றன.

ஆதாரங்கள்: இந்த மாசடைவு காரணமாகப் பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரித்துள்ளதற்கான மருத்துவ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

நீதிமன்றத்தின் கட்டளை:
இந்த விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகிய இரண்டும் இணைந்து, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பணித்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் நீதிமன்றம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"