BREAKING
யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்! முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது இறுதிகிரியைக்கு சென்ற தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் ; பலியான பல்கலை மாணவன் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள் வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம் யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்! முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது இறுதிகிரியைக்கு சென்ற தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் ; பலியான பல்கலை மாணவன் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள் வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம்

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்

கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி சங்கராஜ மாவத்தையிலுள்ள கடையொன்றிற்கு முன்பாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வு பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்களுக்கு மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்று உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொட்டாஞ்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"