BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மகர வாகனத்தில் அருட்காட்சி அளித்த நல்லூர் கந்தன்; நாளை மஞ்சத் திருவிழா

மகர வாகனத்தில் அருட்காட்சி அளித்த நல்லூர் கந்தன்; நாளை மஞ்சத் திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் பக்தி பரவசத்துடன் நடைபெற்று வரும் நிலையில், எட்டாம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

எட்டாம் திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, வேல் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆலய வெளிவீதிகளில் எழுந்தருளிய சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். யாழ்ப்பாணம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் அடுத்த முக்கிய நிகழ்வாக நாளை புதன்கிழமை 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா மாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது.

மஞ்சத் திருவிழாவிலும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தனை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"