BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

அமெரிக்காவில் கடும் குளிர்கால புயல் ,க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் கடும் குளிர்கால புயல் ,க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான குளிர்கால புயல் காரணமாக,

8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நியூ மெக்ஸிகோ மாநிலத்திலிருந்து நியூ இங்கிலாந்து வரை உள்ள பகுதிகளில் வசிக்கும்

சுமார் 140 மில்லியன் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடுமையான வானிலை காரணமாக

மின்சார விநியோகம் துண்டிக்கப்படலாம்,

பெரிய சாலைகள் மூடப்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு டெக்சாஸிலிருந்து வட கரோலினா வரை,

பேரழிவு தரும் பனிப்புயல் மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என

அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த புயலின் தாக்கம்

சூறாவளியின் சேதத்தை ஒப்பிடக்கூடிய அளவுக்கு இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன், நியூயார்க் மற்றும் பாஸ்டன் உள்ளிட்ட நகரங்களில்

ஒரு அடி (1 Foot) வரை பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,

பல மாநிலங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு,

மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

விமான நிறுவனங்களின் தரவுகளின்படி,

இன்று மட்டும் 3,400க்கும் மேற்பட்ட விமானங்கள்

தாமதமாகியுள்ளன அல்லது இரத்துச் செய்யப்பட்டுள்ளன

நாளை 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள்

ரத்து செய்யப்பட உள்ளன

மிட்வெஸ்ட் பிராந்தியங்களில்

வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில்,

10 நிமிடங்களுக்குள் உறைபனி ஏற்படும் அபாயம் உள்ளதாக

வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"