BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புது கண்டி வீதியில் கோர விபத்து: வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு

புது கண்டி வீதியில் கோர விபத்து: வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு

மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புது கண்டி வீதியின் தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக்கொண்ட கோர விபத்தில், 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் பியகமவில் இருந்து தெல்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியில் வலதுபுறமாக திரும்ப முற்பட்டபோது, எதிர்திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி முச்சக்கர வண்டி சாரதி, 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 7 வயது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதி தெல்கொட பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் எனவும், உயிரிழந்த பெண்ணும் அவரது மகளும் சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த காரில் பயணித்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீகஹாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"