BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தேனிலவில் மாதவிடாய் ஏற்பட்டதால் கணவர் தாக்கியதாக புகார்; ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு காப்பாற்றிய மணமகள்

தேனிலவில் மாதவிடாய் ஏற்பட்டதால் கணவர் தாக்கியதாக புகார்; ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு காப்பாற்றிய மணமகள்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த புதுமணப் பெண் ஒருவர், தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னை கடுமையாக தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் நிகில் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் அந்தப் பெண், திருமணத்தின் போது வரதட்சணையாக பணமும் காரும் வழங்கப்பட்ட போதிலும், பின்னர் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கணவர், தன்னை அறைந்தும், உதைத்தும், குத்தியும் தாக்கியதுடன், கழுத்தை நெரிக்கவும் முயன்றதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக தலையிட்டு தாக்குதலை தடுத்து, அவரை காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் டெல்லிக்கு திரும்பியபோதும், கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் இணைந்து தன்னை மனரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தியதாக பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். திருமணமான சுமார் 45 நாட்களுக்குள், ஜூலை 14ஆம் தேதி தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காவல்துறையில் புகார் அளிக்க முயன்றும் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்படாததாக கூறப்படும் நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் தலையீட்டின் பின்னர் கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"