BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது.

கைதடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி அருகில்,சுடர் ஏற்றி மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கூட்டுறவுப் பணியாளர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1984 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 திகதி தென்மராட்சி மேற்கு, கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் வைத்து இலங்கை இராணுவத்தால், கூட்டுறவுப்  பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களை நினைவு கூரும் முகமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்  கைதடி சந்திப் பகுதியில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருடந்தோறும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுவருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"