BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்; கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பரும் சிக்கினார்

மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்; கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பரும் சிக்கினார்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தனுஷ்க கௌசல்யா எனப்படும் “ரத்மலான சைமா” உள்ளிட்ட மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை இன்று 10.08.2026 முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் வழங்கிய தகவலின்படி, மூன்று சந்தேகநபர்களும் இன்று மாலை சுமார் 4.28 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL315 விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக பொலிஸ் உதவி கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவொன்று மலேசியாவுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மற்றும் மலேசிய பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மூன்று சந்தேகநபர்களும் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"