BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் பேர் உயிரிழப்பு; , பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் பேர் உயிரிழப்பு; , பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதிக மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக 9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களால் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்ததுடன், 290 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 நிவாரண முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 224 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த முக்கிய வீதிகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடுகண்ணாவ பகுதியில் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

எனினும், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன் மற்றும் நுவரெலியா – கண்டி பிரதான வீதிகளின் சில பகுதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

களனி மற்றும் களு கங்கை ஆற்றுப் படுகைகளுக்காக முன்னதாக விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நீர்மட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலத்த காற்று, மின்னல் தாக்கம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"