யாழ்ப்பாணத்தில் இளம் நாதஸ்வர வித்துவான் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய நாதஸ்வர வித்துவான் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக