BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பெண் தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை; மாணவர்கள் முன்னிலையில் அதிர்ச்சி சம்பவம் காணொளி வைரல்

பெண் தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை; மாணவர்கள் முன்னிலையில் அதிர்ச்சி சம்பவம் காணொளி வைரல்

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் ண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளியில், பெண் தலைமை ஆசிரியையை இடைநிலை ஆசிரியை ஒருவர் மாணவர்கள் முன்னிலையில் தாக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை சரியாக பணியாற்றவில்லை என தலைமை ஆசிரியை புகார் அளித்ததாகவும், இதனையடுத்து வட்டார கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையால் ஆத்திரமடைந்த ஆசிரியை, வகுப்பறையில் வைத்து மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியையை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தை மற்றொரு ஆசிரியை தனது செல்போனில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அரசு பள்ளி தலைமை ஆசிரியையை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இடைநிலை ஆசிரியையை பணிநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களுக்கு இடையே இடம்பெற்ற இந்த சம்பவம் கல்வி வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"