ஹெட்டன், கினிகத்தேனை – பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்களால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், குறித்த மண்சரிவில் காணாமல் போயிருந்த நால்வரும் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு மற்றும் வெள்ள அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக