BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கைக்கு ஐ.நா. அபிவிருத்தி திட்டம் பாராட்டு; அரசாங்கத்திற்கு தொடர்ந்த ஆதரவு

இலங்கைக்கு ஐ.நா. அபிவிருத்தி திட்டம் பாராட்டு; அரசாங்கத்திற்கு தொடர்ந்த ஆதரவு

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் விதம் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா தெரிவித்துள்ளார்.

கன்னி விக்னராஜா மற்றும் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான உயர்மட்ட சந்திப்பு நேற்று (03) நிதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் UNDP வதிவிட பிரதிநிதி அஸூசா குபோட்டா மற்றும் பொருளாதார நிபுணர் கலாநிதி வகீஷா குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கன்னி விக்னராஜா, எதிர்காலத்திலும் இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நிதி ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட விடயங்களில் தற்போதைய அரசாங்கத்துடன் எந்தவிதமான விவாதமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டமும் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கு UNDP வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை வழிகாட்டலுக்கு அப்பாற்பட்டு தொடர்ச்சியான தொடர்பும் ஒத்துழைப்பும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் எதிர்கால சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"