அம்பாறை மாவட்டம் இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகள் மூலம் பெறப்பட்ட சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வருமானப் பணத்தை முறையாக அரச கணக்கில் வைப்பிலிடாமல் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஊடாக பெறப்படும் வருமானப் பணம், அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் முறையாக வைப்பிலிடப்பட வேண்டியதாகும்.
எனினும், குறித்த பணத்தை உத்தியோகபூர்வ கணக்கில் வைப்பிலிடாமல் தவறியதாக சந்தேகிக்கப்படும் பெண் பொலிஸ் சார்ஜண்ட் தொடர்பான நிதி முறைகேடு, அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி கணக்காய்வின்போது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக