BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

நடிகர் சிம்பு புதிய படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி? ரசிகர்களுக்கு செம அப்டேட்

நடிகர் சிம்பு புதிய படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி? ரசிகர்களுக்கு செம அப்டேட்

கொரோனா காலத்தை தனக்கான திருப்புமுனையாக மாற்றிக் கொண்டு, முழுமையான மாற்றத்துடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியவர் நடிகர் சிம்பு.

ஒல்லியான உடல் தோற்றம், கட்டுப்பாடு மற்றும் தொடர் திரைப்படங்கள் மூலம், தன் மீதான விமர்சனங்களை முற்றிலும் மாற்றியுள்ளார்.

தற்போது, ‘அரசன்’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு விறுவிறுப்பாக நடித்துக் கொண்டு வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளி ஸ்பெஷலாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ‘அரசன்’ மற்றும் ‘அஸ்வத்’ படங்களுக்குப் பிறகு,

சிம்பு அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், இந்தியளவில் பிரபலமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் கதையை சிம்பு ஓகே செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

‘அரசன்’ படத்தை முடித்ததும்,

சிம்பு – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் இப்படத்தையும் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால்,

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"