யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழி பகுதியை நேரில் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதியை பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த விண்ணப்பத்தை நேற்று பரிசீலித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், தேவையான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நாளை காலை 9.00 மணியளவில் செம்மணி மனிதப் புதைகுழி பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை நேரடியாக பார்வையிடவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் மற்றும் அங்குள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து பிரதிநிதிகள் குழுவினர் நேரடி அவதானிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக