BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை; எதிர்க்கட்சி தவறான தகவல் பரப்புவதாக நீதி அமைச்சர் குற்றச்சாட்டு

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை; எதிர்க்கட்சி தவறான தகவல் பரப்புவதாக நீதி அமைச்சர் குற்றச்சாட்டு

பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக செயல்பட்டவர்களும், ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளில் பிணையில் உள்ளவர்களுமே தற்போது நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவது முரண்பாடானதாக இருப்பதாகவும் அமைச்சர் விமர்சித்தார்.

தற்போதைய அரசமைப்பின் கீழ், ஜனாதிபதி அல்லது பிரதமரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நீதியரசர்களை நியமிக்க முடியாது என்றும், அரசமைப்பு பேரவையின் அனுமதியுடன் மட்டுமே ஜனாதிபதி நியமனங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நீதித்துறை அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சாதக மற்றும் பாதக கருத்துக்கள், பரிந்துரைகள் அனைத்தும் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் தற்போது விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதால், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சில தரப்பினர் தப்பித்துக்கொள்ளும் நோக்கில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அவர் கூறினார்.

நாட்டில் நீதித்துறை முழுமையான சுயாதீனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், ஊழல் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"