BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதற்குமான கலந்துரையாடல் நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

நாட்டிற்கு அந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டித் தரும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான நிலையான ஓய்வூதியத் திட்டம் அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியதுடன், அதற்கான நடைமுறை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும், சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களை மாவட்ட மட்டத்தில் விரைவாக நடைமுறைப்படுத்தும் வகையில், நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து திட்டங்களை செயற்திறனுடன் முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதன் மூலம் நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொள்முதல் நடைமுறைகளால் ஏற்படும் தாமதங்களை குறைக்கும் வகையில், ஜனவரி முதல் வாரத்திலேயே கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும், சுற்றுலா அமைச்சின் விசேட தேவைகளுக்கு விரைவான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறைக்குத் தேவையான சுமார் எட்டு இலட்சம் மனித வளத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஹோட்டல் பாடசாலைகளின் பயிற்சித் திட்டங்களை விரிவுபடுத்தவும், அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தயாரிக்கவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், தூதரக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் எதிர்கால சர்வதேச ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"