BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அத்துருகிரியையில் பேருந்து டிப்பர் மோதிய விபத்து: பேர் காயம், நீண்ட மீட்பு நடவடிக்கையின் பின் சாரதி காப்பாற்றப்பட்டார்

அத்துருகிரியையில் பேருந்து டிப்பர் மோதிய விபத்து: பேர் காயம், நீண்ட மீட்பு நடவடிக்கையின் பின் சாரதி காப்பாற்றப்பட்டார்

கொழும்பு மாவட்டத்தின் அத்துருகிரிய பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை சுமார் 4.15 மணியளவில், கொடகம – பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய ஜயந்தி மாவத்தைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் சாரதி வாகனத்திற்குள் சிக்கியிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்த மீட்பு நடவடிக்கையின் பின்னர் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தும் டிப்பர் வாகனமும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவத்தையடுத்து குறித்த வீதியில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"