BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை புத்தங்கல சரணாலயத்தில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபர் கைது வனவிலங்கு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

அம்பாறை புத்தங்கல சரணாலயத்தில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபர் கைது வனவிலங்கு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தின் புத்தங்கல சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வனவிலங்கு திணைக்களத்துக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, குறித்த நபர் காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் சட்டவிரோத துப்பாக்கியுடன் அந்தப் பகுதியில் நடமாடி வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் திட்டமிட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுற்றிவளைப்பின் போது, அரசாங்கத்துக்குச் சொந்தமான புத்தங்கல சரணாலயக் காணிக்குள் இருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை மீறி ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் வேட்டையாட முயன்றதாகக் கருதப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வனவிலங்கு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சட்டவிரோத வேட்டை மற்றும் ஆயுதப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"