BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எல்பிட்டியவில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர்கள் தப்பியோட்டம்; அதிகாரி ஒருவர் காயம்

எல்பிட்டியவில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர்கள் தப்பியோட்டம்; அதிகாரி ஒருவர் காயம்

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹடுவ பகுதியில் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் பொலிஸாரை தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், இரு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பியோடியவர்களை துரத்திச் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரை, சந்தேகநபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், சந்தேகநபரின் கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அங்கு வந்த மற்றொரு குழுவினர் அவரை மீட்டுச் சென்று தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய சந்தேகநபர், கொலைச் சம்பவம் ஒன்றுக்கு ஆதரவளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை குறித்த சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்படாத நிலையில், கூர்மையான ஆயுதத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"