BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை பிசியோதெரபிஸ்ட் மர்ம மரணம்: பிரதான சந்தேகநபரின் வாக்குமூலத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

அம்பாறை பிசியோதெரபிஸ்ட் மர்ம மரணம்: பிரதான சந்தேகநபரின் வாக்குமூலத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய பிசியோதெரபிஸ்ட் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் வாக்குமூலம் விசாரணைகளுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதுடைய பிசியோதெரபிஸ்ட் ஷாம்யா தர்ஷனி என்பவரின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், யாழ்ப்பாணத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர், 30 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களை இலக்காகக் கொண்டு நம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், தனது மனைவியையும் இந்த மோசடி நடவடிக்கைகளில் பயன்படுத்தியுள்ளதாகவும், ஏமாற்றப்பட்ட பெண்களிடம் அவர் தன்னை சந்தேகநபரின் மூத்த சகோதரி என அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாக்குமூலத்தில், உயிரிழந்த பெண்ணை நுவரெலியாவிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்ததாகவும், பின்னர் அவர் அறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த தாம், உடலை வாகனத்தில் ஏற்றி தெல்தெனிய பகுதிக்கு கொண்டு சென்று வைத்தியசாலை வாகன நிறுத்துமிடத்தில் விட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதால், சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பிரதான சந்தேகநபரும் அவரது மனைவியும் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"