BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய தாய்: காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல் இருவரும் விளக்கமறியலில்

வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய தாய்: காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல் இருவரும் விளக்கமறியலில்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில், சமூக வலைத்தளங்கள் மூலம் 50 வயதுடைய நபருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட திருமணமான பெண் ஒருவர், தனது 14 வயது மகளையும் அழைத்துக்கொண்டு கல்முனை பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு சந்தேகநபருடன் சந்தித்து, தங்குவதற்காக வாடகை வீடு ஒன்றை பெற்றுக்கொண்டு சில காலம் வசித்துள்ளனர்.

இதன்போது, குறித்த நபர் சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், அதற்கு சிறுமியின் தாய் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"