BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

மகிந்தவை கைது செய்ய மணி போதும்; சரத் பொன்சேகாவின் பரபரப்பு குற்றச்சாட்டு

மகிந்தவை கைது செய்ய மணி போதும்; சரத் பொன்சேகாவின் பரபரப்பு குற்றச்சாட்டு

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியதாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவைக் கைது செய்வது சிக்கலான விடயம் அல்ல என்றும், 24 மணித்தியாலங்களுக்குள் கூட அதனைச் செய்ய முடியும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கு நீதி வழங்கப்படாமல் அரசாங்கத்தின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"