BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ் பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதாக நீதிமன்றில் தகவல்

யாழ் பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதாக நீதிமன்றில் தகவல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் வீட்டிலேயே இடம்பெற்றிருக்கலாம் என்பதும், கிடைத்த சாட்சிகள் மற்றும் நீதிமன்ற ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிவான் எஸ். லெனின்குமார் இந்த முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

விசாரணையில், சாட்சிகள், அவதானக் குறிப்புகள் மற்றும் நீதிமன்ற ஆதாரங்கள் அனைத்தும் இணைத்து பரிசீலிக்கப்பட்டதில், இது கொலைச் சம்பவம் எனும் நிலைப்பாடு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் ஜூன் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகியுள்ளதுடன், சந்தேக நபர்களின் தரப்பிலும் சட்டத்தரணிகள் ஆஜராகி வருகின்றனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"