BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வ நிகழ்வு முன்னெடுப்பு

டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வ நிகழ்வு முன்னெடுப்பு

Denmark நாட்டில், Mullivaikkal Remembrance Day நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விசேட நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, டென்மார்க்கின் Grindsted நகரில் அமைந்த தேவாலயத்தில் மிகுந்த உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக விசேட திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அருட்தந்தை Bjarke Friis தலைமையில் தோத்திரப் பாடல்கள் பாடப்பட்டதுடன், தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிக்கு முதன்மைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, பொதுமக்கள் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் நினைவேந்தல் உரைகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்ததுடன், நீதி கோரும் குரல்களையும் வலுப்படுத்தியது.

நிகழ்வின் இறுதியில், முள்ளிவாய்க்கால் நினைவாக தயாரிக்கப்படும் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” பற்றிய முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு, பங்கேற்றவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

இந்த வகையான நினைவேந்தல் நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்கள் வரலாற்றை மறக்காமல், எதிர்கால தலைமுறைகளுக்கு அதனை எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"