BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

செப்டெம்பர் வரை நீண்டகால வறட்சி? - எல் நினோ தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

செப்டெம்பர் வரை நீண்டகால வறட்சி? - எல் நினோ தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகு வெப்பநிலை அதிகரித்து, நாடு முழுவதும் நீண்டகால வறட்சி மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன, தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைக் காலத்தில் 'எல் நினோ' தாக்கம் உருவானால், வழமையாகக் கிடைக்கும் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போது நாடு எல் நினோ அற்ற ஒரு நடுநிலையான நிலையில் இருந்தபோதிலும், இதில் ஏற்படும் மாற்றங்கள் விவசாயம், நீர் விநியோகம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.


இருப்பினும், இந்த முன்னறிவிப்பின் துல்லியம் மற்றும் முற்கூட்டிய முன்னேற்பாடுகள் குறித்துப் பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் போதிய தயார்படுத்தல்களைச் செய்துள்ளதா என்கிற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. தற்போது நிலவும் இடைப் பருவப் பெயர்ச்சிக் காலம் மே மாத நடுப்பகுதியில் முடிவடையவுள்ளது. அதன் பின்னர் உருவாகும் தென்மேற்கு பருவக்காற்று தற்காலிக நிவாரணத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், எல் நினோ காரணியால் மழைவீழ்ச்சி பொய்த்துப்போகும் அபாயம் உள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"