BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வரலாற்றில் முதல்முறையாக இலட்சத்தை எட்டிய தங்கத்தின் விலை: இலங்கையில் அதிரடி உயர்வு!

வரலாற்றில் முதல்முறையாக இலட்சத்தை எட்டிய தங்கத்தின் விலை: இலங்கையில் அதிரடி உயர்வு!

கொழும்பு செட்டியார்தெரு தங்க வர்த்தக நிலையங்களின் தகவல்களின்படி, இன்று (04.04.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 400,000 ரூபாவாக உயர்ந்துள்ளது. அதேவேளை, ஆபரணத் தங்கமான 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 368,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அண்மையில் 3 இலட்சம் ரூபா மட்டத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது மிகக்குறுகிய காலத்தில் அதிரடியாக உயர்ந்து 4 இலட்சம் ரூபாவை எட்டியுள்ளது நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகச் சந்தையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,676.4 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், இது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் +0.51% (+23.77 டொலர்கள்) வளர்ச்சியாகும். சர்வதேச சந்தையில் டொலரின் வலுவிழப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளே இந்தத் தொடர் விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் 24 கரட் தங்கம் 48,520 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 44,480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய உயர்வு சந்தையில் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"