BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஏப்ரல் மாதத்திற்கான , மெட்ரிக் தொன் எரிவாயு: மாலைத்தீவில் தயார் நிலையில் - லிட்ரோ நிறுவனம் தகவல்!

ஏப்ரல் மாதத்திற்கான , மெட்ரிக் தொன் எரிவாயு: மாலைத்தீவில் தயார் நிலையில் - லிட்ரோ நிறுவனம் தகவல்!

இலங்கையின் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பை லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டுக்குச் சொந்தமான 42,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு தற்போது மாலைத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கையிருப்பு ஏப்ரல் மாதத்திற்கான முழுமையான நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்றும், இதனை விரைவாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


மேலும், மே மாதத் தேவைகளுக்காக 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏந்திய மற்றொரு கப்பல் ஏப்ரல் 25-ஆம் திகதி இலங்கைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் கேஸ் (Laugfs Gas) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிடுகையில், 7,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏந்திய கப்பல் ஒன்று ஏப்ரல் 4-ஆம் திகதி நாட்டை வந்தடையும் எனத் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலமான ஏப்ரல் மாதத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இக்கையிருப்புகள் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"