BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

நாட்களில் "ஹாப்பி ராஜ்" வசூல் சாதனை: ஜி.வி. பிரகாஷின் ரீ-என்ட்ரி படத்திற்கு கிடைத்த வரவேற்பு!

நாட்களில் "ஹாப்பி ராஜ்" வசூல் சாதனை: ஜி.வி. பிரகாஷின் ரீ-என்ட்ரி படத்திற்கு கிடைத்த வரவேற்பு!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான "ஹாப்பி ராஜ்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கௌரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். குறிப்பாக, நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் வருகை தந்துள்ளமை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இவர்களுடன் ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம் மற்றும் மதுரை முத்து ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கலவையான விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், குடும்பங்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையிலான கதைக்களம் இப்படத்தின் வசூலுக்குக் கைகொடுத்துள்ளது. அதன்படி, உலகளாவிய ரீதியில் இப்படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ. 3.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதே காலகட்டத்தில் தமிழகத்தில் கென் கருணாஸின் "யூத்" (Youth) திரைப்படம் பலத்த போட்டியை ஏற்படுத்தி வரும் போதிலும், "ஹாப்பி ராஜ்" தனது நிலையான வசூலைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"